இந்து சமுத்திரத்தின் நித்திலமாம் இலங்கைத் தீவின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான், எனது சில பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்களை, எனது கற்பனையையும் இணைத்து ஒரு கதையாகத் தர முயன்றிருக்கிறேன். இரு சகோதரிகளின் பள்ளிக் காலத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை, அவர்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சுனாமிகளிலிருந்து எவ்வாறு வெளிவந்து வாழ்க்கையை வென்றெடுக்கிறார்கள் என்பதைச் சொல்லிச் செல்கிறது. உண்மைக் காதலுக்கு என்றும் வெற்றியே! கதை என்பதால் ஏதாவது குறைகள் இருப்பின் மன்னித்து, அதை எனக்கு அறியப்படுத்தினால் என்னை செம்மைப்படுத்திக் கொள்ள பேருதவியாக இருக்கும். என்னை இந்த எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் நிதனிபிரபுவுக்கு இக்கதையை சமர்ப்பிக்கிறேன்