இந்தி நாடக உலகில் புகழ்பெற்ற தர்மவீர் பாரதியின் பிரசித்தமான அரசியல் நாடகப் பிரதியின் தமிழாக்கம் இந்நூல் . இந்தியத் துணைக் கண்டம் பிரிக்கப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இந்நாடகம் வன்முறை அரசியலையும் தன்னியல்பை கொடூரப்படுத்திக் கொள்வதையும் பேசுகிறது. இந்திய அரசியல் நிலைமையை உட்பொதிந்து, மகாபாரதக்கதையை திருதராஷடிரன் கண்ணோட்டத்தில் கூறுவதுபோல அமைக்கப்பட்டது இந்நாடகம். கெளரவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வதாக அரங்கேறும் இந்நாடகம் குருடர்களின் வழியாக ஒளியின் கதையை உரைக்கிறது.