வரலாறு, கற்பனை இரண்டையும் நேர்த்தியாகக் குழைத்து வண்ணமயமான ஓர் உலகைத் தனக்கேயுரிய தனித்துவமான மொழியில் படைத்திருக்கிறார் நூலாசிரியர் என்.எஸ்.மாதவன். ‘லந்தன் பத்தேரியிலெலுத்தியகள்’ என்னும் தலைப்பில் மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நாவலை இரா.முருகன் ஜீவனுள்ள நடையில் அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.