பண்டைய எகிப்திய வரலாற்றிலும், ரோம் வரலாற்றிலும் கிளியோபாட்ரா, தவிர்க்க
முடியாத ஒரு சக்தியாக இருந்திருக்கிறாள். வலிமையான ரோம் பேரரசின்
தலைவர்களான ஜூலியஸ் சீஸரையும், மார்க் ஆண்டனியையும் தன் கண்ணசைவில் காலில்
விழ வைத்திருக்கிறாள். அவள் அரவணைப்பில் ஆட்சி மாறியிருக்கிறது. அழுத
கண்ணீரில் அரசியல் மூழ்கியிருக்கிறது.எகிப்தின் மாபெரும் பேரரசியாக,
மயக்கும் பேரழகியாக, ஆகச் சிறந்த காதலியாக கிளியோபாட்ராவைக் கொண்டாடும் அதே
வரலாறு, அவளை ஆதிக்க வெறி கொண்டவளாக, அகந்தை நிறைந்தவளாக,
ஒழுக்கமற்றவளாகவும்கூடச் சித்திரிக்கிறது. அவள் ஆச்சரியங்கள் தீராத
நிரந்தரப் புதிர்.