நீ நீயாக இருக்க வேண்டும் நான் நானாக இருக்க வேண்டும் என்று உணரத்தொடங்குவதின் ஆணிவேராக இருப்பது சுய அலசல்
ஆகும். சுய அலசல் செய்து, தன்னை உணர்வதற்குள், ஒவ்வொருவரின் ஆயுளில் முக்கால் பகுதி முடிந்து விடுகிறது. மீதி கால்
பகுதியில் அலச முற்படும்போது வயதும், உடம்பும் ஒத்துக்கொள்ள மறுக்கின்றன. ஏதோ பிறந்தோம், வாழ்க்கையை எப்படியாவது ஓட்டி முடித்து விடுவோம் என்றுதான் இன்றைய பெரும்பாலானோர் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். அந்த நிலையினில் ஏதாவது ஒரு சிறுமாற்றம் செய்து, இவ்வுலக வாழ்க்கையின் ரகசியத்தை புரிந்து வாழவேண்டும் என்று உணர்ந்தவைகளையும் இங்கு பதிவு செய்திருக்கிறேன். இங்கே பதிவு செய்யப்பட்டவைகள் அனைத்தும் இறுதி உண்மை என்று ஒரு போதும் நான் சொல்ல மாட்டேன். நீங்கள் நீங்களாக இருந்து 'சும்மா 'படியுங்கள். எந்த எதிர்பார்பில்லாமல் மிக அமைதியாக,நேரம் கிடைக்கும்போது மட்டும் இந்நூலை படியுங்கள். அங்கே பல உண்மைகள் விளங்கும் முரண்பாடுகள் உடைந்தொழியும். இங்குள்ள பதிவுகளையும் உங்கள் சுயமான பதிவுகளையும் கலந்து உணர்ந்து பாருங்கள் . அதனால் உங்களை சமப்படுத்தும் அல்லது ஆனந்தப்படுத்தும் ஏதாவது உணர்வுகள் ஏற்பட்டால், அதுதான் எங்களின் பதிவுகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.
- பதிப்பகத்தார்.