இன்று, எங்கெங்குக் காணினும் வெற்றிமேல் வெற்றி கொண்டவர்களாக மனிதர்கள் விரைந்து கொண்டியிருக்கின்றனர். பிறரை
வீழ்த்துவதைத்தான் பெரும்பாலோர் வெற்றி என வரையறை செய்து வைத்திருக்கிறார்கள். உண்மையில், வெற்றி வெளியில் இல்லை. வெற்றியை வெளியில் தேடிக் கொண்டிருக்கும் வரை நிறைவைப் பெற முடியாது. நிம்மதியை அடைய முடியாது.
'அகிலம் எல்லாம் கட்டி ஆளினும்
கடல்மீதிலே ஆணை செலவே நினைவர்'
என்று தாயுமானவர் சொன்னது போல், உலகத்தை யெல்லாம் வெற்றி கொண்டவர்களிம் திருப்தி அடைந்ததில்லை. மனிதா! உண்மையில் வெற்றி நீ மட்டுமே! தன்னை அறிந்து இன்பமும் தந்திரத்தை அறிந்து கொண்டால் வெற்றி நீ மட்டுமே என்பதை விளக்கிக் கொள்ளலாம். அதை விளக்கிக் கொள்ள ஒரு விளக்காகத் துணையிருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்நூலைப் படைத் திருக்கிறேன். யாருடனும் யாரையும் ஒப்பிடாமல் அவரவர் சுயமாக வளரவும், பொறாமை, தீவிரவாதம், வன்முறை ஆகியவை அறவே நீங்கவும், இளைஞர்களின் ஆளுமை மற்றும் திறமையை வளர்க்கவும் அகஸ்த்திய பாரதியின் பயிற்சி உதவுகிறது.
- அகஸ்த்திய பாரதி.