வாழ்க்கையெனும் பயணத்தின் இலையுதிர் காலத்தில் நடுக்கத்தோடு நின்றிடுவது ஒரு சுகானுபவமல்ல தான் எதிர் நிற்பது ஒரு ஆயுட்காலத்தின் முடிவுரைகள் மாத்திரமே என்ற புரிதல் அந்த நெற்றிகளில் சுருக்கங்களாய் படர்ந்து விட சின்ன சின்ன நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டே தளர் நடை போடுவது மாத்திரமே அந்த வயதினருக்கு விதிக்கப்பட்ட பாதை.