ஆய கலைகள் அறுபத்தி நான்கினுள் சோதிடமும் ஒரு கலை. சோதிடம் அறிவியலாழ தத்துவமா என்றால், தத்துவம் என்றுதான் கூற முடியுமே ஒழிய அதை அறிவியல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அறிவியல் கூறுகளை சோதிடக் கலை உள்வாங்கிக் கொண்டால்தான். காலத்திற்கு ஏற்றவாறு புதிய மாற்றங்களை உட்கொண்டால்தான் நெகிழ்ச்சித் தன்மை உடையதாக இருந்தால் தான், அக்கலை உயிர் வாழ முடியும். அதை ஒரு சாக்குப்பைக்குள் போட்டு இறுக முனிந்து விட்டு, இவ்வளவு தான், என்று கூறி 'நிறைமனம் கொள்வோர், கால்களை ஒடித்து விட்டு குதிரைச்சவாரி செய்ய ஆசைப்படும் மனிதர்களே. சோதிடத்தில் கிரகம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாவம் என்பதை வலியு றுத்த எத்தனை காலம்தான் கரடியாக கத்திக் கொண்டிருப்பது என எனக்குப் புரியவில்லை. கிரகங்கள் பாவங்களின் வேலையாட்கள் என்பதை உணர்த்த இன்னும் பல நூல்கள் வெளிவர வேண்டும். ஜோதிடத்தில் இதுவரை இருந்து வந்த சில அறிவியல் சாராத கூறுகளை ஒதுக்கி, அறிவியல் ரீதியில் ஜாதகத்தை ஆய்வு செய்ய இந்நூல் ஒரு கருவியாக உதவும். விதி என்ற கொடுப்பினையும், மதி என்ற தசாபுத்திகளையும், பாவபுள்ளிகளோடு இணைத்தும் பகுத்தும், வேறுபடுத்தியும் புதிய பரிமாணத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
- ஜோதிட ரத்னா A.: தேவராஜ்.