சமயங்களின் தத்துவங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்னால் அதன் அடிப்படைகளை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்பதால் இந்திய சமயங்களையும் தத்துவங்களையும் குறித்த எளிய அறிமுகத்தைச் செய்துவைக்கிறது இந்நூல், சமயங்களையும் தத்துவங்களையும் பற்றிய முழுமையான புரிதலில்லாமல் அறியாமையிலும் தத்துவ வறட்சியிலும் சிக்கியுள்ள இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்திய சமயங்களையும் தத்துவங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் இந்நூல் ஆழமான புரிதலுக்கும் வளமான சிந்தனைக்கும் வகை செய்கிறது.