ஆரோக்கியமான வாழ்வே வளமான வழ்வு என்பதில் ஒருவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. என்னை பொறுத்தவரையில்
ஆரோக்கியமான வாழ்வு என்பது நல்ல உணவை பொறுத்தே இருக்கிறது. நல்ல உணவு என்றால் உயர்தர உணவு என்ற
அர்த்தமில்லை. நல்ல உணவு சுவையுள்ளதாக இருக்க வேண்டும். சத்துள்ளதாக இருக்க வேண்டும். சிக்கனமானதாக இருக்க வேண்டும். இன்றைய சூழலுக்கு ஏற்ப விரைவாகவும், சலபமாகவும் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நல்ல உணவே வளமான ,ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு என்னுடைய இந்த முதல் புத்தகத்தில் சில எளிய உணவுக் குறிப்புகளை, அதிலும் குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு குறிப்புகளை கொடுத்து இருக்கிறேன். இந்த குறிப்புகள் எல்லாம் தான் சமையல் அறையில் செய்து பார்த்த அளவின் படி கொடுத்து இருக்கிறேன். அவரவர் தேவைக்கு ஏற்ப மசாலா சாமான்கள், காரம் இவற்றின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம், பொதுவாக எல்லா அளவுகளும் 4-6 நபர்களுக்கு தேவையான அளவுகளே.
-சாந்தி பலராமன்.