கம்ப்யூட்டரை பரவலாக பலரும் பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டத்தில், கம்ப்யூட்டரில் எந்த வகையான சாஃப்ட்வேர்களை
தேர்ந்தெடுத்து படிப்பது என்று பலரும் குழம்பிய நிலையில் இருந்தனர் .ஏனெனில் , அன்றைய நிலையில் கம்ப்யூட்டர் சம்பந்தமான அடிப்படை அறிவை பெறுவதற்குகூட பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அவை, எவ்வகையான கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன என்று தெரியாமல் இருந்தனர் பலர். அந்த சமயத்தில் தான் எங்கள் நிறுவனம் சுயதொழில் சார்ந்த கம்ப்யூட்டர் படிப்புகளை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. அது நாள்வரை தனிநபர், நிறுவனம் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். டிடிபி, மல்டிமீடியா, ஒஇடியோ டைட்டிலிங், அனிமேஷன் போன்ற கம்ப்யூட்டர் படிப்புகள் அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி வேலை வாய்ப்புபகளை அள்ளள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் போல் அள்ளி வழங்கிக் கொண்டேயிருக்கிறது. புரோகிராமிங் துறைக்கான கம்ப்யூட்டர் கல்வியில் அவ்வப்பொழுது சிறிது ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், எங்கள் நிறிவனம் வழங்கும் கம்ப்யூட்டர் கல்வியில் வேலை வாய்ப்பு மற்றும் சுயதொழிலில் ஏற்றம் மட்டுமே, இறக்கம் என்பது இருந்ததே இல்லை.கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் சாஃப்வேர்கள் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே வருவதால், நீங்கள் சேரும் கல்வி நிலையங்களில் அப்பொழுது எந்த வெளியீடு புதிதாக உள்ளதோ அதைத்தேர்தெடுத்து படிப்பது நல்லது. இந்த கம்ப்யூட்டர் நூலை பாமர இளைஞர்களிடம் படித்தவர்கள் சேர்க்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நாளைய இந்தியாவை வல்லரசாக்க இது போன்ற புத்தகங்களை இளைய சமூதாயத்திற்கு கொண்டு செல்லும் அராம.நல்லதம்பி அவர்களுக்கும் , கறபகம் புத்தகாலயத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.