வணிகத்திலும் வாழ்க்கையிலும், நீங்கள் சாமர்த்தியமாக முன்னேறிச் செல்ல வேண்டும். விஷயங்கள் தாவிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதால், உங்கள் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதை உறுதி செய்வதற்கு உங்கள் மூளை திறனை நன்கு பயன்படுத்தி சாமர்த்தியமாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்வது எப்படி என்பதை நீங்கள் அறிய வேண்டியது அவசியத் தேவை.
* தெளிவான எதிர்கால ஆவல், எதிர்கால ஒருங்கிணைப்பு கவனம் நீங்கள் பெற்றிருந்தால், நீண்ட கால குறிக்கோள்களை அடைவதற்குத் தேவையான முடிவுகளை எடுப்பதற்கும் மிகத்தெளிவான சிந்தனைகளை உருவாக்குவதற்கும் அவை எளிதான வழிகளைக் கொடுக்கும். வெற்றி பெற்ற மனிதர்கள் எதிர்காலத்தில் நீண்ட கால அடிப்படையில் மிகப்பெரிய எதிர்கால பயன்களை அடைவதற்கு, குறுகிய கால தற்கால உடனடியான பயன்களை தாமதப்படுத்தி விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.