என் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அகவுலகின் ரகசிய சலனங்களிக் கைப்பற்ற கவிதை உதவியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என்வசமாகியிருக்கிறது.