மேனகா திரை உலகில் பிரபலம் ஆன பிறகு அவள் தந்தை சொந்தம் கொண்டாடிக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்து போகிறார். மேனகாவுக்கு இதில் விருப்பம் இல்லாத போதும் தாயின் வேண்டுகோளுக்குப் பணிந்து போகிறாள். ரேகாவைக் கொலை செய்ததாக ஹரிகிருஷ்ணாவின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. மேனகா மற்றும் ஹரிகிருஷ்ணா வழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை, திருப்பங்களைப் படிக்கும்போது அந்தக் காட்சிகள் நம் கண்ணெதிரே நடப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. விறுவிறுப்பான இந்தக் கதையின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை யாரும் சுலபமாக ஊகிக்க முடியாத வகையில் நகர்த்திச் செல்கிறார் எழுத்தாளர்.