யோகங்கள் பயிலுவதற்கு நல்ல குரு தேவை. நல்ல குருவைத் தேடிக்
கண்டுபிடித்துவிட்டால் யோகம் பயின்ற மாதிரிதான். யோகியின் பார்வையே யோகத்தை
உணர்த்திவிடும். நல்ல குருவை நாடுங்கள். நான்கு யோகங்களையும் கற்றுக்
கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு உன்னதமடையும்; எடுத்துக்காட்டாகத்
திகழ்வீர்கள்; பகவானைச் சென்றடையும் வழியையும் காண்பீர்கள். இந்நூல் அந்
நான்கு யோகங்களைப் பற்றி நன்கு விளக்கமளிக்கிறது. தொகுப்பாசிரியர் அரிதின்
முயன்று யோகங்களை தொகுத்தளித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகள்.