ஒவ்வோர் ஆண்டும் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினமான ஜனவரி 30-ம் நாள் இந்தியாவில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது, இந்த பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவது, பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்துவது மற்றும் நாட்டிலிருந்து தொழுநோயை முழுவதும் ஒழிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.