ஸ். ராமகிருஷ்ணன் எழுதிய " திருக்குறள் - ஒரு சமுதாயப் பார்வை " என்ற நூலைப் படித்த அன்பரொருவர் , அந்த நூலைப் பற்றியும் எஸ். ராமகிருஷ்ணனின் கதைகளைப் பற்றியும் புகழ்ந்து சில தினங்களுக்கு முன்னர் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
" திருக்குறள் - ஒரு சமுதாயப் பார்வை " நூலை எழுதிய எஸ். ராமகிருஷ்ணனும் புனைகதைகள் எழுதிவரும் எஸ். ராமகிருஷ்ணனும்ஒருவரல்லர் என்பதை நான் எடுத்துக்கூறும்வரை அவர் அறிந்திருக்கவில்லை. இந்த மயக்கம் வேறு சிலருக்கும் இருக்கக்கூடும் என்பதாலேயே இப்பதிவு.