சிறுகதைகள்.குமரேசர் என்பவர் ஒரு கற்பனைப் பாத்திரம்.எண்பது வயது நிரம்பிய
அவர்,முக்கால் செவிடர்.அவர் எப்படி ஜோசியரானார் என்பது முதல்
அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும் தன்னிடம் ஜோசியம்
கேட்டு வருவோர் தங்கள் பிரச்சனைகளைச் சொல்லும் போது அவைகளெல்லாம் காதில்
விழாத குமரேசர்,தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளை வைத்துச் சில வார்த்தைகளைச்
சொல்ல அவைகள் சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைக்கு எப்படித் தீர்வாகிறது
என்பதைச் சொல்வதே இந்நகைச்சுவைக் கதைகள்.தமிழின் சிலேடை என்ற பாணி
இக்கதைகளில் பின்பற்றப்பட்டுள்ளது. இக்கதைகள் தேவி வார இதழில் தொடராக
வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை.