'புதுசா ஏதாவது சொல்லணும், கலவரப்படுத்தி கவனத்தை ஈர்க்க வேண்டும்' என்ற
யோசனையிலேயே திரிந்த காலம். அண்ணன் அறிவுமதியின் அன்பளிப்பான கவிதைத்
தொகுப்பு ஒன்றைத் திறந்தபோது, 'திரை வரலாற்றில் ஆழச்சுவடு பதிக்கவிருக்கும்
அன்புத் தம்பி பாலாவுக்கு..' எனக் கையெழுத்திட்டிருந்தார். இவர்
ஒருத்தர்.. நான் கதையே இல்லாம அலையறேன். எங்கிட்டு ஆழச்சுவடு பதிக்கிறது
அலுப்புடன் புரட்டிக்கொண்டே போனபோது கண்ணில் பட்டது அந்தக் கவிதை சிக்கியது
கரு. கதைக் களன்..