இசை உடல் என்றால் அதில் உயிர் எனப்படுவது கருவாய் அமைந்த கவிதை அல்லது பாடல் வரிகளே. அந்த வகையில் இலங்கையின் மெல்லிசைப் பாடல் வரலாற்றில் காத்திரமான - புலமையுடன் பாடல் புனைவோர் வரிசையில் கார்மேகம் நந்தாவின் கணிசமான பங்களிப்பு கடல்கடந்தும் தொடர்வது மகிழ்ச்சிக்குரியது.