பக்திக் காலத்துக்கு முன் அதனைப்பற்றிய புரிதலையும், பக்தி இயக்கத்தின் காலத்தில் அதன் பயன்பாட்டையும், திரிபுகளையும். நமது சமகாலப் பண்பாட்டில் ஊடகங்கள் உருவாக்கும் பிம்பங்கள் மீதான ஈர்ப்பைப் பக்தி மரபின் நீட்சியாகவும் ஒருசேரத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியாக இத்தொகுப்பு உள்ளது.
'பக்தி' என்கிற சொல் ஒரு அனுபலம் என்ற அளவில் ஒரு மதத்துக்குள் அடக்கிவிட முடியாத வினையாகவும், வினையூக்கியாகவும், 'பக்தி இயக்கம்' என்கிற பெயர்ச்சொல் என்கிற அளவில், மதம் மற்றும் வழிபாட்டோடு தொடர்பு கொண்டதாகவும் உள்ளது. அதே வேளையில், பக்தி அனுபவத்தை முன்னிறுத்தி நிறைவேற்றப்படும் அரசியல் ஆய்வுக்கான களனாரும்போது இது நமது பண்பாட்டு வரலாற்றின் அங்கமாகவும் ஆகிறது.