பண்டைய இந்திய கவிதைக்கொள்கைகளின் இன்றைய ஏற்பமைவினைக் கண்டடைய நான் முயற்சி செய்தேன். வடமொழியிலும் தமிழிலும் இருக்கின்ற கவிதைக் கொள்கைகள் - சிலவற்றுக்கு இன்றைய ஏற்பமைவினை அளிக்க இயலும்; இயன்றிட வேண்டும் என்பதே இந்நூலின் இலக்கு, பரந்துப்பட்ட, தொன்மையான கவிதையியலில் எவ்வாறான மாற்றங்களை இடம்பெறச் செய்யலாம் என்பதில் மாற்றுக் கருத்துகள் எழுவது இயல்பு. அபிநவகுப்தனோ ஜகந்நாத பண்டிதரோ நின்றுவிட்ட இடத்திலிருந்து, பேராசிரியரோ நச்சினார்க்கினியரோ சென்றடைந்த இடத்திற்கு சற்றேனும் முன் நகர நாம் முயற்சி செய்யவேண்டுமென்ற வேண்டுதலையேனும் திறனாய்வாளர்களும் வாசகர்களும் ஏற்றுக்கொண்டால் இம்முயற்சி வீணடையவில்லை எனலாம்.