திருத்தொண்டர்
புராணம், சிவபெருமானுக்கு, 'முனைவர்' என்று முன்மொழிகிறது. தொல்காப்பியம்
'முனைவன் கண்டது முதன்னூலாம்' என்கிறது. முயற்சிக்கு முனைப்பு தேவை.
முனைப்பு, மனத்தினால் உணர்வது. மனமோ அறிவியலால் விளக்க முடியாதது.
முனைப்பினால் முதன்னூல் உருவாக்கி, என்னையும் 'முனைவர்' பட்டத்திற்குத்
தகுதி உடையவளாக, தமிழ் உலகிற்குக் காட்டுவதற்கு முனைந்து, 'முனைவர்'
அருளால் செயல்பட்டேன். முனைவர் பட்டத்திற்காகக் கம்பர் தந்த 'இராமன் கதை
யைக் களமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டேன். 'கதை'யும் 'புராண' மும் கேட்டுக்
கேட்டுப் பண்பட்ட இனம் தமிழர் இனம். கசப்பான உண்மைகளைக் 'கதை யாகக்
கூறுவதிலும், புதுமையான உண்மைகளைப் 'புராண மாகக் கூறுவதிலும் தமிழ் 'உலகம்'
- தமிழ் மக்கள், முன்னோடியர் ஆவார்.