கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி' என மகிழும் நமக்கு நமது மொழியான தமிழ் 'உயர் தனிச் செம்மொழி' எனும் பெருமையும் உண்டு. எனினும் நமது மொழியிலே கால வழக்கிலே பல்வேறு பிற மொழிச் சொற்கள் கலந்துள்ளன. வடமொழி எனும் சமஸ்கிருதம் பன்னெடுங் காலமாக இங்கு வழங்கி வருவதால் பெருவாரியான வடமொழிச் சொற்கள் நமது மொழியிலே கலந்துள்ளன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் அரபி, பாரசீகம் மற்றும் உருது மொழிச் சொற்கள் தமிழில் கலந்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஆங்கிலச் சொற்கள் நம் வழக்கில் இடம் பெற்றுள்ளன. இவை தவிர வேறு பல இந்திய மொழிச் சொற்களும் நம் வழக்கில் உள்ளன. அப்படிப்பட்ட சொற்கள் இனம் காணப்பட்டு சமஸ் கிருதம், உருது, ஆங்கிலம், பிறமொழிகள் ஆகிய தலைப்பு களில் பட்டியலிடப்பட்டு உரிய தமிழ்ச்சொற்கள் அவற்றிற் கெதிரே தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்கள் படித்துப் பயன் படுத்தவும் பரப்பிடவும் வேண்டுகிறேன்.