உலகம் முழுவதும் உள்ள ஹோமியோபதி மருத்துவ முறையை சுமார் 50 கோடி மக்கள் கடைப்பிடிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நமது நாட்டிலும் இந்த மருத்துவ முறை பரவி வருகிறது. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் ஹோமியோபதி மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஹோமியோபதிக்கும் மற்ற மருத்துவ முறைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன.
* ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள் என்னென்ன.
* ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்துவது எப்படி.
* அவசர காலங்களில் முதலுதவிக்குப் பயன்படும் ஹோமியோபதி மருந்துகள் என்னென்ன.
* ஹோமியோபதியின் துணை மருத்துவமான மலர் மருத்துவத்தின் சிறப்புகள் என்னென்ன.
என்பது உள்ளிட்ட ஹோமியோபது மருத்துவம் மற்றும் அது சார்ந்த மலர் மருத்துவம் குறித்த அடிப்படையான பல விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் இந்தப்புத்தகம், ஜோமியோபதி மருத்துவத்தைப் புரிந்துகொள்ள மிகவும் உதவும்.
- டாக்டர் எஸ். வெங்கடாசலம்.