வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுத்துக்களைப் படிப்பதே ஒரு வரம். அந்த எழுத்துக்கள் பற்றி எழுதுவது என்பது... எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அவர்களின் எழுத்துக்கள் ஒரு சமுத்திரம். ஆழ, அகலங்கள் காண இயலா அற்புதம். முதன் முதலில் காமகோடி முத்துக்கிருஷ்ணன் என்ற தோழி மூலம் இவரின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம் ஆனது. அவர்கள் எழுத்தில் ஆழ்ந்த முதல் நாவல் - 'கோபுர கலசங்கள்!' பொதுவாகவே நான் ஓர் சந்தோஷப் பேர்வழி அனைவரை யும் சிரிக்க வைத்து நானும் சிரித்துக் கொண்டே இருப்பேன். ஆனால் முதன் முதலில் இவரின் 'வலம்புரிச் சங்கு படித்தபொழுது கண்களில் கண்ணீர் கொட்டியது. இரண்டு மூன்று நாட்கள் அந்த எழுத்துக்களின் தாக்கம் எனக்குள்ளே! எழுத்துக்கள் கூடப் பேசுமா? மனதினுள் உட்கார்ந்து கொண்டு நம்மையே உற்று உற்றுப் பார்க்குமா? பார்த்ததே! இவரின் 'ஆசை முகம் மறந்தாயோ?', 'அவள் முகம் காண படித்த போதும், படித்த பின்னும்...