நெடு நாளைக்குப் பிறகு தாத்தா வந்திருக்கிறார். ஒரு நாள் முழுவதும் ஊர்க் கதைகள் பேசியாகி விட்டது. கிருஷ்ணன், ராமன், கலா, அருணா, மூர்த்தி எல்லோரும் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்திருக்கின்றனர். தாத்தா, ஒரு கதை சொல்லுங்களேன் என்றான் மூர்த்தி.
நல்லது, நாளை தீபாவளியல்லவா? தீயின் விழாத்தானே தீபாவளி? தீயின் கதையை நான் சொல்லட்டுமா? என்றார் தாத்தா.
'' நீங்கள் எந்தக் கதை சொன்னாலும் நன்றாகத்தான் இருக்கும். சொல்லுங்கள் தாத்தா என்றாள் கலா.