தமிழ் மொழியில் நாவல்கள் பெருகி வளருவதற்குக் காரணமாக
இருந்த முன்னோடி நாவல் என்ற வகையில் திரு. அ. மாதவையா அவர்கள் எழுதிய
;பத்மாவதி சரித்திரம்' தமிழ் அறிஞர்களிடையே மிகவும் பிரபலமான நூலாகும்.
இந்த நாவல் ஆசிரியரால், ஆறுமுறை பதிப்பிக்கப்பட்டதுடன் 50 களிலேயே சென்னைப்
பல்கலைக் கழகத்தாரால் பாடநூலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர்
ஏழாம்பதிப்பிணை தி. லிட்டில்ப்ளவர் கம்பெனியார் 1958 ஆண்டில், ஆசிரியர்
சந்ததியாரிடம் உரிமை பெற்று மலிவுப் பதிப்பாக வெளியட்டுள்ளனர். அதன்
பின்னர் வேறு பதிப்புகள் வந்துள்ளதாகத் தெரியவில்லை.