'சிராப்பள்ளி', திரு ஏன் விலக்கப்பட்டது என்று தெரியவில்லை. என்றாலும் படிக்கச் சுகமாகத்தான் இருக்கிறது. ஒரு புதுவிதமான அனுபவம் முத்து கறுப்பனுக்கு. மனசு சம்மந்தப்பட்ட நோய். டாக்டர் மருந்து கொடுக்காமல் மருந்தாகிறார். அவரது மருத்துவ முறையே வித்தியாசமானது. முறுக்கு சாமியாரைத் தேடி ரயிலில் வரும்போது மீன் வாசனை அடிக்கிறது. முத்துக்கறுப்பன் பொறுத்துக் கொள்கிறான். முறுக்கு தின்னும் சாமியாருக்கும் கொஞ்சம் மீன் வாடை அடிப்பதை என்னவென்று சொல்ல, அதில்தான் கதை இருக்கிறது.