மாறிக் கொண்டேயிருப்பதுதான் உலக இயல்பு என அறிந்திருந்த போதும் சொல்லி முடிப்பதற்குள் தீர்ந்து காலாவதியாகி விடுவதே இன்றைய யதார்த்தமாக இருக்கின்றது.
கவிதையின் வெளியும், நவீனம், பின் நவீனம், அதி நவீனம், அர நவீனம் எனும் வார்த்தைகளையும் கோட்பாடுகளையும் காலி செய்து கொண்டேயிருக்கின்றது. பார்ப்படுவதற்கான உன்னதம் என்று சொல்லப்படுவதற்கான அளவுகோல்கள் எல்லாருக்கும் கிட்டி விட்ட சமயத்தில் செயப்படு பொருளாக நேர்த்தியாக கவிதை வந்து சேர்ந்து கொண்டே இருக்க, அதன்