பிரபல கதாசிரியர் பிரபஞ்சன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அற்புதமான நாவல் 'நேசம் மறப்பதில்லை' 1995 - ஆம் ஆண்டின் இறுதியில் ஆசிரியரால் எழுதப்பட்டது. கதையின் நாயகன் பிரான்சு நாட்டில் இருந்து தமிழகத்திற்கு - புதுவைக்கு- தன் மூதாதையரின் சொந்த ஊருக்கு வருகை தருவதும் - அங்கு அவனுக்கு ஏற்பட்ட காதல்... அதன் பின்னணியில் நடந்தவற்றை ஆரம்பம் முதல் நிறைவு வரை டைரிக் குறிப்பு வாயிலாக விவரித்து கதைக்குள் செல்வது வித்தியாசமான அணுகுமுறை!