நிஜத்தைச் சொற்களில் ஸ்தாபிக்க முடியும் என்ற நினைப்பே இல்லாதவன். ஒரு சமயத்தில் சொல்லாலும் இன்னொரு சமயத்தில் செயலாலும் தானே அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன். பெரும்பாலும் அவனுக்கு அவனேதான் வழிகாட்டி ஒளிவிளக்கு. அவன் பேச்சு இன்னொருவர் பேச்சு இல்லை. அவன் அறிவு படிப்பறிவில்லை. அவன் கற்பனைக் காவிய உபயம் இல்லை. அது அவனுக்கு மரபு, ஐதீகம் என்றல்லாத வாழ்க்கை தந்த ஞானம்.