எழுபது எண்பதுகளில், இந்தியப் பெரு நாட்டில் ஒரு குழப்பமான சூழல் நிலவியது. எங்கும் ஒரு அமைதியற்ற அமைதி நிழல் கொண்டிருந்தது. நாட்டில் தலைவர்கள் கொள்கைத் தழுவலில், ஒரு உறுதியற்ற ஊழல் நிலை, ஊசலாடியது. மக்கள் மத்தியிலும் அஃதே. நாடு முழுமையும், ஒரு பிரளயத்தின் முன் கருக்கொள்ளும் கனல் கசிந்து கொண்டிருந்தது.