ஆர்வமுள்ளவர்களால், பல சுவாரசியமான விஷயங்களை முயன்று பார்க்க கடியும். ஆனால், துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். வால்ட் டிஸ்னியிடம் ஆர்வம் இருந்தது; துணிச்சலும் இருந்தது.
கலகலப்பான குட்டி எலி மிக்கியும் பிரம்மாண்ட மான டிஸ்னி லேண்டும் பல தலைமுறை களைக் கடந்தும் மக்களை மகிழ்விக்கும் அற்புதங்கள். அசாத்தியங்களைக் கனவு காண்பவராக இருந்திருக்கிறார் வால்ட் டிஸ்னி.
கனவுகளைப் புசித்து, கனவுகளில் திளைத்து, கனவுகளையே அடித்தளமாக அமைத்து தனது மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துக்காண்பி த்திருக்கிறார். கனவுகளை நிஜமாக்கும் ரகசியம் அவருக்குத் தெரிந்திருந்தது.
விதவிதமான பிரச்னைகள் அவரைத் துரத்தியடித்திருக்கின்றன. பாசத்துடன் பழகிய பலர் அவரை ஏமாற்றியிருக்கிறார்கள். மக்கள் மீதும் உலகின் மீதும் பல சந்தர்ப்பங்களில் அவர் முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருக்கிறார். ஆயினும், அவர் வெற்றியாளராக மாறியது எப்படி?
வால்ட் டிஸ்னி என்னும் மகத்தான சாதனையாளர் உருவான கதையை விறுவிறுப்பான நடையில் சுவையாக அறிமுகம் செய்துவைக்கிறது இந்நூல்.