உலகம் பல சர்வாதிகாரர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் கொடுங்கோலர்களின் கதை வித்தியாசமானது. உலக மக்களால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத கொடுங்கோலன் இடிஅமீனின் வரலாற்றைச் சொல்லும் நூல் இது. இடிஅமீன் ஆட்சியில் நடந்த திகிலூட்டும் சம்பவங்களை இந்த நூல் விவரிக்கிறது. நன்றி: இந்தியா டுடே, 11/12/13.
இடி அமீன் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர்.
1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு
தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல்
பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும்.