இன்று புதுமைப்பித்தனுக்குப் பிறகு அற்புதமான அங்கதம் அமைய எழுதுபவர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்கள். இவரது சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் அங்கதச்சுவை மிக்கவை. புதுமைப்பித்தனின் அங்கதம் கடுமையாகவும் எள்ளலாகவும் இருக்கும். ஆனால் இ.பா வின் அங்கதம் மென்னகை பூக்க வைப்பதோடு, சில சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைப்பதாகவும்,மறைமுகமாகச் சாடுவதாகவும் இருக்கும். 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டிருக்கும் இவரது 'வேதபுரத்து வியாபாரிகள்' ஒரு மிகச் சிறப்பான அரசியல் அங்கத நாவல்.