நேர்காணல்கள் சம்பந்தப்பட்ட ஆளுமைகளின் அறியப்படாத பல பரிமாணங்களை வெளிக்கொணரும் வாய்ப்புகளைக் கொண்டது. அவர்களுடைய வாழ்க்கைப் பின்னணி, தத்துவ நோக்கு, செயல்கள் மற்றும் படைப்பு சார்ந்த பார்வைகளின் பரிணாம வளர்ச்சி குறித்த புரிதல்கள் போன்றவற்றை நேர்காணல்கள் வழியாக வெளிக்கொண்டுவர இயலும். சிறு பத்திரிகைகளுக்கும் நேர்காணல்களுக்குமான உறவை ஒரு விரிந்த தளத்தில் அணுகியது சுபமங்களா இதழ்தான். பின்பு புதிய பார்வை அதை மேலெடுத்துச் சென்றது. நேர்காணல்கள் எடுத்ததன் மூலம் பரவலாக வாசகர்களிடம் என்னை அறியச் செய்தது புதிய பார்வை இதழ்தான்.