மனிதனுக்கு உரிய உணவாகிய தேங்காய் பழங்களையே உணவாகப் பெரும்பாலும் உண்டு வாழ முயலும்போது, உடலிலுள்ள கழிவுகள் வெளியேறி, உடலும் ரத்தமும் சுத்தமாகி, உடல் தூய்மையானதாக உருவாகிறது. வாத, பித்த, கப நாடிகள் சீரடைகின்றன. சுவாசமும் சீராகிறது. இப்பேருண்மைக்கு இன்றும் சாட்சியாக விளங்குபவை மனிதனைவிடக் கீழான உயிரினங்களான, பகுத்தறிவில்லாத உயிரினங்கள், அனைத்து விலங்கினங்கள், அனைத்து பறவையினங்கள், அனைத்து ஊர்வன உயிரிகள், அனைத்து நீர் வாழ் உயிரினங்களே. இவையனைத்தும் இயற்கையாக உணவைத் தேடி, இயற்கையாக உண்டு, இயற்கையாக இன்றும் வாழ்ந்து வருகின்றன.
இவ்வாறாக மனிதனும் பெரும்பாலும் இயற்கையாக உண்டு, இயற்கையாக வாழ முயலும்போது, மனித உடலும் தன்னைத் தானே அனைத்து உடல், உள நோய்களிலிருந்து தானே சரி செய்து, சரியாக இயங்க ஆரம்பிக்கும். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இது தெவ்வீகப் பேருண்மையாகும்.
உலகிலுள்ள துன்பங்களுக்கெல்லாம் காரணம், சமைத்துண்ணும் பழக்கமே! சமைத்துண்பது தற்கொலைச் செயலாகும். ஆவதும் உணவாலே அழிவதும் உணவாலே. உணவை மாற்றினால், உலகையே மாற்றலாம்!