"பற்றவப்பு (Welding) நுணுக்கங்களும் முறைகளும்" (Welding Skills & practices) என்ற இந்தப் பொறியியல் நூலை, திரு.சு. கந்தசாமி B.E. அவர்கள் மிகச் சிறப்பாக அமைத்துள்ளார். இந்நூலில் கையாளப்பட்டுள்ள கலைச்சொற்கள் (Technical Terms) எளிய இனிய தமிழில், வளமாக அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கதாக இருப்பதோடு, அறிவியலின் எந்தப் பிரிவையும் எளிதாகத் தமிழில் விளக்க இயலும் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் அமைந்துள்ளது. விரிவாகவும் விளக்கமாகவும் முதன்முத்தில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இந்நூல், பற்றவைப்புத் துறையில் பயில்வோருக்கும் அத்துறையின்கண் பணிபுரிவோர்க்கும் உறுதுணையாக இருக்கும்.