அறிவியல் புதினங்கள் தமிழில் அதிகம் வெளிவரவில்லை. அறிவியல் செய்திகளையும் அறிவியல் உணர்வையும் சுவைத்தேனுடன் கலந்து ஊட்டுவதற்கு மிகச் சிறந்த ஊடகங்கள் இவை மிகவும் பயன்படக் கூடிய ஆனால் அதிகம் பயன்படுத்தப்படாமல் அநாதையாய்க் கிடக்கும் இந்த ஊடகத்தை நண்பர் நெல்லை சு. முத்து கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் மாக்கோள் மைந்தர்கள் என்ற அறிவியல் புதினம் படைத்திருக்கிறார்.