கதை இலக்கியம் பொதுவாக, வரலறாக மாறும் நிகழ்வுகள், தகவல்கள் கொண்ட சுவாரசியமான கலை உருவாக்கம். உணர்வுகளுடன் ஊடாடுவதால் நீண்ட காலம் வாசகர் உறவு கொண்டது. கதை இலக்கியம் கடந்த காலத்தின் பதிவு, நிகழ் காலத்தின் தகவல், வருங்காலத்தின் நீட்சி என்பர்; மூன்றையும் இணைக்கும் கலைவண்ணம் கலந்த செய்திச் சிந்தனையாகவும் சிறக்கிறது.