நீலனும் மலைப்பாம்பும் என்ற இந்த சிறுவர் கதை நூலில் பதினாறு சிறுவர் கதைகள் உள்ளன. இதில் எட்டுக் கதைகள் பிரபல சிறுவர் இதழ்களில் வெளிவந்தவை. மற்றவை நான் தற்போது எழுதிச் சேர்ந்தவை. இதில் மலை வனங்களை களமாகக் கொண்ட கதைகளும் பிறகதைகளும் சேர்ந்துள்ளன. பலகதைகளில் வரும் கதாபாத்திரமாக நீலன் வாசக சிறுவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவன் என்பதை கடிதங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள், இதழ்களில் ஆசிரியர் கடிதங்கள் மதிப்புரைகளால் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன்.