அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய சிறுகதைகளை தனித்தனியே பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருந்த எனக்கு திரு. உத்தம சோழனின் அறிமுகம் ஒரு அதிர்ஷ்டம் தான். அவர் நல்கிய உற்சாகமும், வழிகாட்டுதலும்தான் இன்றைக்கு இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழ உதவியது. என்னுயைத முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட ஒப்புக்கொண்ட திருவரசு புத்தக நிலையத்திற்கு என் மரியாதைகளும், நன்றிகளும் எப்போதும் உண்டு.