இப்போது உங்கள் கையில் இருப்பது எனது பதினொன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
இதில் பன்னிரண்டு சிறுகதைகள்.
பன்னிரண்டும் பன்னிரண்டு விதம்.
பன்னிரண்டுவித கதைக்களங்கள்.
பன்னிரண்டுவித கோணங்கள்.
பன்னிரண்டுவித அனுபவங்கள்.
அத்தனையும் என்னைச் சுற்றி நிகழ்ந்த சம்பவங்கள். நான் பார்த்த மனிதர்கள் நான் வாழும் இந்தச் சமூகம் இவற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டவையே. என் மனசுக்குள் குதியாட்டம் போட்டவை. ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு படிப்பினைதான். வாழ்க்கை மனிதர்களுக்கு வரைந்து காட்டும் சித்திரங்கள் தான்.