
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.73

Opening the world of stories

Microwave oven samayal
Free shipping over ₹500
எத்தனை ருசி இருக்கிறது நம்முடைய வாழ்க்கையில்! அத்தனையையும் சுவைத்துப் பார்க்க நமக்குள்தான் எவ்வளவு ஆசைகள்! ருசியின் மீதான இந்த ஆசைகள்தான் நம்முடைய கலைகளுக்கு ஆதார சுருதி. கலைகளில் மிகவும் அபூர்வமானது, அலாதியானது, சுவையானது சமையல் கலை.
அடுப்புக் கரியை உடம்பிலும் ஆடையிலும் பூசிக்கொண்டு, புகையை கண்களில் தேக்கிக்கொண்டு தலைவி, தலைவனுக்கு உணவு பரிமாறும் அழகை, சங்க இலக்கியங்கள் அழகாகவும் நயமாகவும் படைத்துக் காட்டுகின்றன!
தமிழருக்கு எப்போதுமே சமையல் ஒரு பிடித்தமான கலையாகவே இருந்து வருகிறது. காதலும் பேரன்பும் நிரம்பி வழிகிற குடும்ப வாழ்க்கையில் மேலும்மேலும் இன்பத்தைப் பெருக்குகிற சக்தி சமையல் கலைக்கு உண்டு. சுவையோடு கூடிய உணவு, அறிவையும் மனதையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்கிறது. வயிறு குளிர்ந்தால் மனதும் குளிர்ந்து போகிறது. இந்த நூலில் நம்முடைய மனதையும் வயிறையும், வகைவகையான சமையல் குறிப்புகளால் மேலும் குளிர வைத்திருக்கிறார் வசந்தா விஜயராகவன்.
அவள் விகடன் இதழில் தொடராக வெளிவந்து, பெண்கள் மட்டுமின்றி ஆண்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற மைக்ரோவேவ் ஓவன் சமையல் குறிப்புகள் தொகுக்கப்பட்டு இப்போது ஒரே நூலாக வந்திருக்கிறது.
ஏற்கெனவே விகடன் பிரசுரம் வெளியிட்ட சமையல் நூல்களின் வரிசையில் இது மற்றுமொரு பங்களிப்பு. சமையலில் புதிய நுணுக்கங்களும், புதிய செய்முறைகளும், புதிய வகைகளும் கொண்டதாக சமையல் கலையின் நவீன முறையை இந்த நூல் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். இனி அலுப்பில்லாமல், அவதியில்லாமல் எளிமையான ஒரு கலையாக சமையலை அணுகமுடியும்.