அதுபோல இன்னொரு பெண்மணி இந்திய ஏவுகணையின் பெண்மணி மற்றும் அக்னிபுத்ரி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் ஆராய்ச்சியாளர் டெஸ்சி தாமஸ் தான் அது. ஆண்கள் மட்டுமே தலைமை தாங்கும் ஏவுகணை திட்டத்தை பெண்களும் சாதித்து காட்ட முடியும் என்ற அடையாளத்தை உருவாக்க உறுதியாக பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு டி.ஆர்.டி.ஓவில் இணைந்து, அவர் இந்தியாவின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். குறிப்பாக அவர் உருவாக்கிய நீண்ட தூர அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அக்னி-v முக்கியமான ஒன்று.