ஜெனிபர் தனது பன்னிரண்டாவது வயதில் திரையுலக வாழ்க்கையை துவக்கினார். ராஜா கோ ராணி சி பியார் ஹோ கயா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின் பதினான்காவது வயதில் குச் நா கஹோ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார்
சரஸ்வதி சந்திரா தொலைக்காட்சி தொடரில் நடித்தமைக்காக இந்திய தொலைக்காட்சி அகாதமியால் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். 2016 ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சி அலைவரிசையின் பேயாத் நாடகத்தில் மாயா மல்கோத்ராவாக நடித்தார். 2018 இல் கலர்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையில் பேபனாஹ் தொலைக்காட்சி நாடகத்தில் நடித்தார்வின்ஜேன்ட் இந்திய தொலைக்காட்சி நடிகைகளில் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் ஒருவராவார்.