திருநெல்வேலி மாவட்டத்தின் தென்மேற்குத் திசையில் செட்டிகுளம் பஞ்சாயத்து அமைந்துள்ளது.செட்டிகுளம் பஞ்சாயத்தின் செட்டிகுளம் கிராமத்திற்கும் அணுவிஜய் நகரியத்திற்கும் இடையில் பழங்கால மர்ம பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இப்பகுதி மக்கள் அந்த பங்களாவை மங்களா என்று அழைக்கின்றனர்.