இந்தக் கதை ரொம்ப ரொம்ப முக்கியமான கதை. கலா பூர்வமாக ஒளிர்வதால் , வாசிக்கும் நெஞ்சங்களை வசீகரிக்கிறது. கதை நடக்கும் சூழலையும் , மனிதர்களின் , உக்கிர உணர்வுகளையும் மொழியின் மூலமாக வாசக மனசுக்குள் இறக்கிவிடுகிறது. கதையின் அழகியலால் கவரப்பட்டுவிடுகிற வாசகர்கள், கதை முடியும் இடத்தில் வாழ்வியல் குறித்த ஒரு சமுதாய ஒளியை உணர்கிறார்கள்.