கங்கையின் முதன்மை நீரோட்டமானது, உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில்
பாகீரதி ஆறு மற்றும்
அலக்நந்தா ஆறுகளின் சங்கமத்தில் துவங்குகிறது. இந்து பண்பாடு மற்றும் புராணங்களில் பாகீரதி ஆதாரமாகக் கருதப்படுகிறது, இருப்பினும்
அலக்நந்தா ஆறு, என நீரியல் ஆதாரம் கூறுகிறது.
[10][11] அலக்நத்தா ஆற்றின் நீராதாரமானது
நந்தா தேவி,
திரிசுல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களிலின் பனிமுகடுகளில் இருந்து
உருவாகின்றது. பாகீரதியானது 3,892 மீ (12,769 அடி) உயரத்தில் உள்ள
கங்கோத்ரி பனிப்பாறைகளின் அடியில் உள்ள கோமுகியில் இருந்து
தோற்றம்பெறுகிறது.